Offline
சிறுவயது நினைவுகளை நியாபகப்படுத்தியது – மெய்யழகனை பாராட்டிய நாகர்ஜூனா
Published on 10/04/2024 00:30
Entertainment

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். ‘கார்த்தியின் 27’-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா,ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது.96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும்இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுன்  படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “அன்புள்ள தம்பி கார்த்தி, உங்கள் படமானமெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்த் சாமி இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாய். இப்படம் பார்க்கும் பொழுது என் முகத்தில் ஒரு புன் சிரிப்பு இருந்துக் கொண்டே இருந்தது. இப்படம் என்னுடைய சிறுவயது நினைவுகளை நினைவுப்படுத்தியது.

உன்னுடன் நடித்த தோழா திரைப்பட நியாபகங்கள் வந்தது. முழு படக்குழுக்கும் எனது பாராட்டுகள்.” என கூறினார். நாகர்ஜூனா தற்பொழுது ரஜினிகாந்துடன் கூலி மற்றும் துனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Comments