Offline
ஆவண படம் இயக்கி விருது பெற்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா
Published on 10/05/2024 12:21
News

நடிகர் சூர்யா – ஜோதிகா நட்சத்திர தம்பதியின் மகளான தியா, தான் படிக்கும் பள்ளியில் லீடிங் லைட் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். அந்த ஆவணப்படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. இது குறித்த தகவலை நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு, சினிமாவில் ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வை பற்றிய ஆவணப்படம் எடுத்துள்ள எனது மகள் தியாவை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தப் பணியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ள ஜோதிகா, மகள் இயக்கியுள்ள ஆவணப்படத்தின் லிங்கையும் இணைத்துள்ளார்.

 

Comments