Offline
Menu
கோல குபு பாரு கேப் சாலையில் மண் சரிவு
Published on 10/05/2024 12:44
News

கோலா குபு பாரு கேப் சாலையில் இன்று விடியற்காலை 4.15 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது.

விடியற்காலை 4.15 மணிக்கு அந்த நிலச்சரிவு நடந்ததாக உலு சிலாங்கூர் பொதுப் பணித் துறை இலாகா உறுதிப்படுத்தியது. அந்தச் சாலையில் எஃப்.டி 55 என்ற பகுதியில் சுமார் 20 மீட்டர்நீளத்திற்கு அந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் பொதுப் பணித் துறையின் பேரிடர் நடவடிக்கை குழு மண் சரிவு நடந்த பகுதியில் களமிறக்கப்பட்டதாக அறிக்கை வழி தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சாலையின் ஒரு பகுதி மட்டுமே போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட நிலையில் மண் இடிந்த பகுதியில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 7.15 மணியளவில் அந்தச் சாலைப் பகுதியும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது என்று முகநூல் வாயிலாக பொதுப் பணித் துறை தெரிவித்தது.

Comments