Offline
மரத்தை மோதி கார் சிதைந்தது – ஆடவர் பலி
Published on 10/05/2024 12:45
News

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மரத்தை மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். பேரா, இஸ்கந்தார் சாலையில், ஸ்ரீ மஞ்சோங் கூட்டரசு கட்டடத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் 21 வயது ஆடவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து அதிகாலை 2.10 மணியளவில் தொலைப்பேசி அழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் ஸ்ரீ மஞ்சோங் தீயணைப்பு மீட்பு துறை நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றை மோதி, புரோட்டோன் பெஸா கார் ஒன்று முன்புறத்தில் சிதைந்த நிலையில் கிடந்ததையும் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி ஓர் ஆடவர் காயங்களுடன் இருப்பதையும் அவர்கள் கண்டனர் என்று பேரா தீயணைப்பு மீட்பு துறை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அமாட் தெரிவித்தார்.

Comments