புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் ஆகஸ்ட் மாதம் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருந்த இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.
ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) உறுப்பினர்கள், மாலியை தளமாகக் கொண்ட அல்கொய்தாவின் துணை அமைப்பான மற்றும் புர்கினா பாசோவில் செயல்படுகிறார்கள், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பர்சலோகோவின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றபோது கிராம மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஒருவர் கூறுகையில், மூன்று நாட்களாக நாங்கள் உடல்களை சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.
போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாக்க நகரத்தைச் சுற்றி பரந்த அகழி வலையமைப்பைத் தோண்டுமாறு உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
JNIM கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்துள்ளனர்.