Offline
Menu
ஊழியர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டு: மெர்செடிஸ்-பென்சுக்கு $9.5 மில்லியன் அபராதம்
Published on 10/06/2024 21:21
News

ஜெர்மனி :

ஊழியர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில், ஜெர்மானிய வாகன உற்பத்தி நிறுவனமான ‘மெர்செடிஸ்-மென்ஸ்’, இழப்பீடாக அமெரிக்க டாலர் $7.3 மில்லியன் வழங்க வேண்டும் என்று பிரேசிலிய தொழிலாளர் நீதிமன்றம் அக்டோபர் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

சாவ் பாலோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியர்கள் பாகுபாடு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குறித்த நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது . அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

வேலையிடத்தில் காயமடைந்த ஊழியர்கள், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் ஓரங்கட்டப்பட்டதுடன் ‘அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் சூழல்களுக்கு’ அவர்களை ஆளாக்கியதாகக் கூறப்பட்டது. அத்தோடு இனவாதமும் இங்கு தலைதூக்கியிருந்தது என்றும் கூறப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2004ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மெர்செடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலையிடத்தில் காயமுற்று மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறியப்படுகிறது.

மருத்துவ விடுப்பு முடிந்து வரும் அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டதுடன் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகளையும் இழக்க நேர்ந்தது.

Comments