Offline
நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு
Published on 10/06/2024 21:30
News

தெலுங்கு திரையுலகில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத். தமிழில் வாசுகி, கீ, அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் காயத்ரி நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 38. இவருக்கு கணவரும் 10 வயது மகளும் இருக்கின்றனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடந்தது. திரையுலகை சேர்ந்த பலரும் ராஜேந்திர பிரசாத்துக்கு தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.

நேற்று படப்பிடிப்பில் இருந்த ராஜேந்திர பிரசாத் தனது மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனாலும் அவரால் தன் மகளுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

இதில் ராஜேந்திர பிரசாத்திற்கு கூடுதல் துயரம் என்னவென்றால் மகள் காயத்ரி தங்களை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சில காலம் அவரிடம் இருந்து மகளின் குடும்பம் பிரிந்து இருந்தது. சமீபத்தில் தான் அனைத்தையும் மறந்து இரு குடும்பமும் ஒன்று சேர்ந்தது. இந்த நிலையில் காயத்ரியின் இந்த திடீர் மறைவு ராஜேந்திர பிரசாத்தை ரொம்பவே பாதித்துள்ளது. காயத்ரியை பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவை பார்ப்பது போலவே இருக்கும் என்று கண்கலங்கி கூறியுள்ளார் ராஜேந்திர பிரசாத்.

 

Comments