மஞ்சுங்:
பந்தாய் ரெமிஸ், தாமான் பிண்டாங்கில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று பெட்ரோல் குண்டை வீசியதாக நம்பப்படும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை 3.08 மணியளவில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வீட்டை நோக்கி ஒன்பது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் ஹோண்டா எச்ஆர்வி மற்றும் யமஹா எல்சி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது என்றும் மஞ்சுங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் மூவரும் தோயோத்தா அல்டிஸ் காரில் பயணித்ததாகவும், அவர்கள் முகமூடி அணிந்து குறித்த குற்றச் செயலைச் செய்ததாகவும் அவர் கூறினார்.
“புகார்தாரரின் தந்தை தீ ஏற்பட்டதை உணர்ந்து வெளியே சென்று கூச்சலிட்டார், பின்னர் குறித்த சந்தேகநபர்கள் வெளியேறினர். இருப்பினும் புகார்தாரரின் தந்தையால் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது என்றார்.
“அந்த இடத்தில் மேலும் ஆய்வு செய்தபோது, புகார்தாரரின் வீட்டின் வேலிக்கு வெளியே சீன மொழியில் எழுதப்பட்ட ஐந்து தாள்களில் புகார்தாரருர் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
“இருப்பினும், புகார்தாரர் உரிமம் பெறாத இந்தப் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்று ஹஸ்புல்லா கூறினார்.