Offline
Menu
வீடு புகுந்து திருடிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
Published on 10/07/2024 05:46
News

இஸ்கண்டார் புத்ரி, தஞ்சோங் குபாங்கில் செப்டம்பர் 30ஆம் தேதி, வீடு புகுந்து திருடப்பட்டதாகக் கூறப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் எம். குமரேசன் கூறுகையில், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 10.12 மணிக்கு வீடு உடைப்பு குறித்து புகார் வந்ததாகவும், அதிகாலை 3.15 மணியளவில், அதே வீட்டு மனையில் உள்ள ஒரு வளாகத்திற்குள் போலீசார் நுழைந்து நான்கு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் தெரிவித்தார்.

43 முதல் 50 வயதுக்குட்பட்ட நால்வரில் மூவருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதாக அவர் கூறினார். இரண்டு பேர் போதை மருந்து உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது. இரண்டு கைத்தொலைபேசிகள், கைக்கடிகாரம், மடிக்கணினி, பிரிண்டர், தங்க வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் கைப்பற்றினர். குற்றவியல் சட்டம் பிரிவு 457இன் கீழ் வீட்டை உடைத்ததற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது

Comments