Offline
கராச்சி விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: சீனர்கள் 3 பேர் பலி
Published on 10/08/2024 02:23
News

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தில் சீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக சீனர்கள் பலர் பாகிஸ்தானில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து அவ்வபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் சீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர். சீனர் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு சத்தம் பல கி.மீ., தூரத்திற்கு கேட்டதாக கூறும் மக்கள், அதனால் உண்டான தீப்பிழம்பையும் பார்த்ததாக கூறுகின்றனர்.

இதனால், விமான நிலையத்தில் வி.ஐ.பி.,க்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

 

Comments