Offline
ஓட்டத்தின் போது அநாகரீகமாக ஆடை அணிந்ததற்காக இந்திய, தைவான் நாட்டவருக்கு தலா 5,000 ரிங்கிட் அபராதம்
News
Published on 10/08/2024

கோத்தா திங்கி: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பான் ஆசியா இன்டர்நேஷனல் ஓட்டத்தின் போது பொது இடங்களில் அநாகரீகமான ஆடைகளை அணிந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு வெளிநாட்டவர்களுக்கு தலா  5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத்தை செலுத்த தவறினால் 1 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, முறையே 66 மற்றும் 70 வயதான ஆர்தர் வாங் மற்றும் சத்தியநாராயண பிரசாத் பாபோலி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நூர்கலிதா ஃபர்ஹானா அபு பக்கர் தண்டனை விதித்தார். தைவான் பிரஜையான வாங் அவர்களுக்கு மாண்டரின் மொழியிலும், இந்தியப் பிரஜையான சத்யநாராயணாவுக்கு ஆங்கிலத்திலும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

ஓய்வு பெற்றவரும் ஆர்வலருமான வாங், பெங்கராங்கில் உள்ள ஜாலான் உத்தாமா ஜாலான் டேசாருவில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை குற்றத்தைச் செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன்னாள் வழக்கறிஞர் சத்தியநாராயணா, அதே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோட்டல் வளாகத்தில் ஒரே நேரத்தில் குற்றத்தைச் செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 294 (a) பிரிவின் கீழ் பொது இடங்களில் ஆபாசமான செயல்களைச் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

 

Comments