Offline
தஞ்சோங் தோக்கோங் கடலில் மூழ்கி இந்திய ஆடவர் மரணம்
Published on 10/08/2024 02:35
News

ஜார்ஜ் டவுன்:

தஞ்சோங் தோக்கோங் கடலில் நீராடச் சென்ற இந்திய ஆடவர் ஒருவர், நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை 6.34 மணியளவில் கரையோரத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்ட ஏ.சேகர், 44, கண்டுபிடிக்கப்பட்டார் என்று திமூர் லாவூட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்ட் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட உள்ளூர்க்காரர் அவரது நண்பருடன் அப்பகுதியில் நீராடச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர் கடற்கரையிலிருந்து ஒரு பாறையை நோக்கி நீந்தியதாகவும், அதன் பின்னர் அவர் கரைக்குத் திரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

“தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்த பின்னர், பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்பதை மருத்துவ குழு உறுதிப்படுத்தியது,” என்றார் அவர்.

உயிரிழந்த சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Comments