லிப்பிஸ்:
இங்குள்ள ஒரு உணவகத்தின் ஊழியர் ஒருவர் துடைப்பத்தைப் பயன்படுத்தி பெரிய பானையை சுத்தம் செய்வதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, குறித்த உணவகத்தை நேற்று முதல் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
மலேசிய சுகாதார அமைச்சகத்தின் திடீர் சோதனைக்குப்பின்னர், குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த காணொளி நேற்று மாலை 5 மணியளவில் Komuniti Anak-Anak Lipis என்ற முகநூலில் பதிவேற்றப்பட்டது.
குறித்த உணவக ஊழியரின் இந்தச்செயல் உணவகத்தின் பின்னால் நடந்ததாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் குறித்த உணவக வளாகத்தில் குற்றம் நடந்தால், தற்போதுள்ள சட்டத்தின் விதிகளின்படி தமது துறை நடவடிக்கை எடுக்கும் என்று, லிப்பிஸ் மாவட்ட கவுன்சில் தலைவர் டத்தோ முகமட் ஹபிசி இப்ராஹிம் கூறினார்.