Offline
உக்ரைனுடன் இணைந்து போரிட்ட அமெரிக்கருக்கு 7 ஆண்டு சிறை: ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு
Published on 10/09/2024 12:18
News

மாஸ்கோ,அக்.8: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022 முதல் போர் நடந்து வருகிறது.இந்த போர் தொடங்கிய போது, அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் ஹப்பர்டு(72) என்பவர் உக்ரைன் ராணுவத்துடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ரஷ்ய ராணுவத்தினரிடம் ஸ்டீபன் ஹப்பர்டு பிடிபட்டார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ரஷ்ய நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

Comments