Offline
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,419 பேராக அதிகரிப்பு
News
Published on 10/09/2024

அலோர் ஸ்டார்:

இன்று இரவு 8 மணி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 447 குடும்பங்களைச் சேர்ந்த 1,419 பேர் அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 18 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இன்று பிற்பகல் 4 மணிக்குப் பதிவான 347 குடும்பங்களைச் சேர்ந்த 1,157 பேருடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மிக அதிகமாக கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 182 குடும்பங்களைச் சேர்ந்த 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கெடா மாநில துணை இயக்குநர், மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.

அதேநேரம் குபாங் பாசு மாவட்டத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அங்குள்ள ஆறு பிபிஎஸ்ஸில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்.

பெந்தோங் மாவட்டத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 240 பேர் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

 

Comments