Offline
புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தின் முன் திடீர் சாலைத்தடுப்பு நடவடிக்கை; அறுவருக்கு சம்மன் விதிப்பு
Published on 10/09/2024 12:39
News

புத்ராஜெயா:

புத்ராஜெயா மாவட்ட காவல்துறை (IPD) தலைமையக (IPD)நுழைவாயிலில் அதிரடியாக போலீசார் மேற்கொண்ட சிறப்பு சாலைத்தடுப்பு நடவடிக்கையில் ஆறு பேருக்கு சம்மன்கள் வடிக்கப்பட்டது.

நேற்றுக்காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்த நடவடிக்கையில் ஒரு அதிகாரி மற்றும் எட்டு போக்குவரத்து உறுப்பினர்கள் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கப் பிரிவின் (BIPS) இரண்டு உறுப்பினர்கள் ஈடுபட்டனர் என்று, புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அய்டி ஷாம் முகமட் கூறினார்.

மொத்த சம்மன்களில், ஐந்து பேரின் ஓட்டுநர் உரிமம் காலாவதியானது தெரியவந்தது மற்றும் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று அவர் சொன்னார்.

 

Comments