கோலாலம்பூர்:
நாட்டின் நுகர்வு, முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் வலுவான வளர்ச்சி காரணமாக, 2023ல் 3.7 சதவீதத்திலிருந்து அதிகரித்து, தற்போது 4.9 சதவீதமாக மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
2024 முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட வலுவான மேம்பட்ட முதலீடு மற்றும் வர்த்தக செயல்திறன் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டது என்று, மலேசியாவுக்கான உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் அபூர்வ சங்கி கூறினார்.
“முன்னறிவிப்பு காலம் முழுவதும் அதாவது 2024-2028 வரையான காலப்பகுதியில் வளர்ச்சி விகிதங்கள் சராசரியாக 4.3% ஆகவும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் நாணய மாற்று விகிதம் RM4.54 ஆகவும் இருக்கும் என்று வைத்துக் கொண்டால், 2028-க்குள் மலேசியா உயர் வருமானம் பெறும் நாடாக இருக்கும் என்று நாங்கள் கணிக்கிறோம் என்று அவர் சொன்னார்.
“மேலும் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் அதிகரித்த அரசியல் ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் ஆகியவையும் துணைபுரிகின்றன என்று அவர் மேலும் கூறினார்.