Offline
ஜோகூர் வெள்ளம்: 496 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கவைப்பு
News
Published on 10/09/2024

ஜோகூர் பாரு:

ஜோகூரில் வெள்ளம் காரணமாக 133 குடும்பங்களைச் சேர்ந்த 496 பேர் தற்போது குளுவாங், பொந்தியான் மற்றும் பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று, ஜோகூர் மாநிலச் செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

 

Comments