Offline
மா கா பா ஆனந்த் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு?
Published on 10/10/2024 14:52
Entertainment

பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மா.கா.பா ஆனந்த் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடற்பயிற்சி விழிப்புணர்வு செய்யப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு, ஸ்ட்ரீட் டே கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அதுவும் கடைசி சமயத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதனால் ஏமாந்து போன மக்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் உட்பட 50 பேர் மேல் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments