Offline
நயன்தாரா வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்
Published on 10/15/2024 01:37
Entertainment

நடிகை நயன்தாரா அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், அவர்களின் குழந்தைகள் உயிர் மற்றும் உலக் என அனைவரும் அவர்களது வீட்டில் விஜயதசமி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவுகின்றது.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான தம்பதியினர். இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவர்களின் குழந்தைகள் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்தது இல்லை.

தனது குழந்தைகளுடன் நயன் - விக்கி விஜயதசமி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர்.

நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்திற்கான ப்ரீ புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகின்றார்.

Comments