Offline
குடிபோதையில் நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் காயம்
Published on 10/17/2024 15:27
Entertainment

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் பைஜு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஏப்ரல் 18, காரியம் நிசாரம், நிறக்கூட்டு, உப்புகண்டம் பிரதர்ஸ், ராஜதானி, கமிஷனர், லூசிபர் உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியில் நடிகர் பைஜு ஓட்டிய கார் ஒரு பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம்  போலீஸார் விரைந்து சென்று காயமடைந்த வாலிபரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போதையில் இருந்த பைஜுவை போலீஸார் கைது செய்தனர்.

Comments