Offline
கஜினி- 2 படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
Published on 10/17/2024 15:28
Entertainment

ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதை எடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால் கதை பிரச்னையால் அந்த படம் டிராப் ஆனது. இதன் காரணமாக சில ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படம் மற்றும் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கஜினி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதையடுத்து 2008ம் ஆண்டில் அப்படத்தை ஹிந்தியில் அமீர் கானை வைத்து ரீமேக் செய்தார்.

இப்படியான நிலையில் தற்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை அமீர்கானை வைத்து ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சல்மான்கான் நடிப்பில் அவர் இயக்கி வரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கஜினி -2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது

Comments