Offline
இதுதான் தொழில் பக்தி: திரிஷாவைப் பாராட்டிய அஜித்
Published on 10/21/2024 01:15
Entertainment

திரிஷாவின் தொழில் தர்மத்தை வெகுவாகப் பாராட்டினாராம் அஜித். இதை தனது நட்பு வட்டாரத்தில் தொடர்ந்து சொல்லி மகிழ்கிறார் திரிஷா.

கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளார் திரிஷா.

இந்நிலையில், அவர் அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அஜித்துடன் பங்கேற்றார். அங்கு பல நாள்கள் தங்கியிருந்த போதும்கூட, ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் தாம் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியது குறித்து அஜித்திடம் வாய்திறக்கவே இல்லையாம்.

‘கோட்’ பட வெளியீட்டின் போதுதான் அஜித்துக்கு விவரம் தெரிய வந்திருக்கிறது. கோபித்துக்கொள்வாரோ என்று திரிஷா தரப்பு யோசித்தபடியே இருக்க, ‘இதுவல்லவோ தொழில் தர்மம்’ என்று நேரடியாக திரிஷாவைப் பாராட்டினாராம் அஜித்.

பதிலுக்கு, ‘இவரல்லவோ உண்மையான கதாநாயகன்’ என்று திரிஷாவும் பாராட்டி கொண்டு இருக்கிறார்.

Comments