கம்போடிய ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர் பகாங் குவாந்தனில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மரம் விழுந்ததில் சிக்கி உயிரிழந்தார். குவாந்தான் காவல்துறைத் தலைவர் வான் ஜஹாரி வான் புசு கூறுகையில் 29 வயதான சென் சௌத் என்ற நபர், மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பாண்டா சுங்கை பஞ்சிங் நீர்வீழ்ச்சிக்கு அருகே ஐஸ்கிரீம் விற்றுவிட்டுத் திரும்பும் போது, மரம் விழுந்து அந்நபர் பலியானதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மரம் முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அவர் மட்டுமே சாலையில் இருந்தார் எனவும் அறியப்படுகிறது.