Offline
சூர்யாவுக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்
Published on 10/25/2024 00:41
Entertainment

சூர்யா நடித்துள்ள ‛கங்குவா’ படம் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் அடுத்தப்படியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகை காஷ்மீரா பர்தேசி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments