Offline
ரஷ்ய மொழியில் வெளியாகும் ‘கல்கி 2898 AD’
Published on 10/25/2024 00:42
Entertainment

உலகநாயகன் கமலஹாசன், இந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ரஷ்யாவில் வெளியாக இருப்பதாகவும் இதற்காக ரஷ்ய மொழியில் ‘டப்பிங்’ செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் தமிழ் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியானது என்பதுடன், சில வெளிநாட்டு மொழிகளிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 1,200 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், அண்மையில் இந்தப் படம் ரஷ்யாவில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவினால், தற்போது ரஷ்ய மொழியில் இந்தப் படம் ‘டப்பிங்’ செய்யப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள திரையரங்கில் வெளியீடு காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Comments