Offline
அரண்மனை 5 அப்டேட் அனைத்தும் பொய்யே… – குஷ்பு கொடுத்த விளக்கம்
Published on 10/28/2024 02:26
Entertainment

அரண்மனை 5 அப்டேட் அனைத்தும் பொய்யே… – குஷ்பு கொடுத்த விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இதில் நான்காவது பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 100 கோடி வசூல் செய்தது. இதையடுத்து அரண்மனை படத்தின் ஐந்தாம் பாகத்தை அடுத்து இயக்குவேன் என்று கூறினார் சுந்தர். சி. தற்போது அவர் கேங்கர்ஸ் படத்தில் பிசியாக இருந்து வரும் வரை நிலையில் அரண்மனை 5 படத்தை இயக்குவதற்கு அவர் தயாராகிவிட்டது போலவும், அந்த படம் குறித்த போஸ்டர், நடிகர் நடிகையர் பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன.

ஆனால் தற்போது வெளியாகும் அனைத்து செய்திகளும் பொய்யான செய்திகள். சுந்தர். சி மற்றும் அவ்னி சினி மேக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போதுதான் அரண்மனை-5 படம் உருவாகும் . அதனால் இப்போது வெளியாகி வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பு.

கேங்கர்ஸ் படத்தில்தான் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் குஷ்பூ தெரிவித்திருக்கிறார். அதனால் கடந்த சில வாரங்களாக அரண்மனை 5 படம் குறித்து சோசியல் மீடியாவில் வெளியான அனைத்தும் பொய்யானது என தெரிய வந்திருக்கிறது.

Comments