Offline
சூர்யாவுக்கு ‘காக்க காக்க’போல சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’ – சாய்பல்லவி
Published on 10/29/2024 10:39
Entertainment

சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, கடந்த 26-ம் தேதி ஐதராபாத்தில் அமரன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய இப்படத்தின் கதாநாயகி சாய்பல்லவி, ‘அமரன்’ மிகப்பெரிய வெற்றி பெறும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டை தெரிவித்தார். அதன்படி, ‘காக்கா காக்கா’ எப்படி சூர்யா கெரியரில் மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதைப்போல அமரன் படம் மூலம் சிவகார்த்திகேயன் ஒரு பெரிய இடத்தைப் பெறுவார் என்றார்.

Comments