Offline
பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிக லாபம்..
Published on 10/30/2024 02:11
Entertainment

பாக்ஸ் ஆபிசில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தனுஷ் படம்..!!

ரூ.50 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் நாடு முழுவதும் 92 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் ரூ.154.4 கோடி வியாபாரம் செய்துள்ளது .

திரையரங்கில் வெளியாகி அதிகம் பேசப்பட்ட படம் இது, பட்ஜெட்டை விட பாக்ஸ் ஆபிஸில் 3  மடங்கு அதிகமான லாபத்தை ஈட்டி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம்.  படம் தொடங்கி 1 மணி நேரத்தில்  மிரளவைக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தின் இறுதி வரை அதே வேகத்தோடு இருந்தது என்றே கூறலாம்.. நாம் எந்த படத்தை பற்றி பேசுகிறோம் என்று தெரிகிறதா? தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தை பற்றி தான்.

ஜூலை மாதம் வெளியான ராயன் படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்தார், இது அவரின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கத்தில் 'ராயன்' 2வது படம். முதல் படம் 'பவர் பாண்டி' 2017ம் ஆண்டு வெளியானது.

ராயன் படத்தில் தனுஷுடன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா பாலமுரளி ஆகியோரும் நடித்துள்ளனர். 3 சகோதரர் மற்றும் 1 சகோதரி இவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'ராயன்'.

Comments