Offline
அரசியலுக்கு வருவீர்களா..?
Published on 10/30/2024 02:14
Entertainment

நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த 'நச்' பதில்..!!

அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில் குறித்து பார்க்கலாம்.

மறைந்த நடிகர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு (அக்டோபர் 31ம் தேதி) திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது, சிவகார்த்திகேயனுடன் கல்லூரி மாணவ, மாணவியர் போட்டி போட்டு செல்ஃபி எடுத்தனர். இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பின் போது, அரசியலுக்கு வருவீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார். அப்போது சினிமாவில் தான் சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதால், தற்போதைக்கு அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமரன் படத்தில் நடிப்பதற்கு முன் மன ரீதியாக தன்னை தயார் படுத்தி கொண்டதாகவும், பின்னர் உடலை தயார் செய்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Comments