Offline
லோகேஷ் கனகராஜுடன் சூர்யா இணையப்போகும் அடுத்த படம்
Published on 10/30/2024 02:24
Entertainment

கங்குவா பட புரொமோஷன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டிருக்கும் சூர்யா அடுத்ததாக லோகேஷ் கங்காராஜுடன் இணையப்போகும் படம் குறித்து அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு.

மும்பை, தமிழ்நாடு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கங்குவா பட ப்ரோமோஷன் முடிந்துள்ளது. மும்பையில் ஹாலிவுட் நாவலுக்கு சூர்யா கொடுத்த பேட்டியில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசியிருந்தார்.

அவர் கூறுகையில், "ரோலக்ஸ்', 'இரும்புகை மாயாவி' இந்த இரண்டு படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜும் நானும் பேசியுள்ளோம். லோகேஷின் கனவுப் படம் 'இரும்புகை மாயாவி'.

Comments