Offline
கட்சியின் கொள்கை பாடல்; தெருக்குரல் அறிவுக்கு ஊக்கம் தந்த விஜய்
Published on 10/31/2024 09:27
Entertainment

நடிகர் விஜய் தனது திரையுலக பயணத்தில் இந்த 35 வருடங்களில் 68 படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுத்ததாக 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இதுதான் தனது கடைசி படம் என்று கூறிவிட்ட விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் அரசியலில் இறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி ஆச்சரியப்படவும் வைத்து விட்டார். இந்த கட்சிக்காக விஜய் குரலிலேயே கொள்கை பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலுக்கு இசையமைத்து உருவாக்கியவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ராப் பாடகரும் இசையமைப்பாளருமான தெருக்குரல் அறிவு தான்.

இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அறிவு, விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “விஜய்யிடம் என்னை எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள் என நான் கேட்டேன். உன்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என அவர் கூறினார். உங்கள் கட்சியின் கொள்கை பாடலை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பை என்னை நம்பி வழங்கியதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலில் அதை பதிவு செய்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். உங்களுடைய அரசியல் பயணத்திலும் உங்களுக்கு எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Comments