Offline
பாயான் லெப்பாஸில் உள்ள வாகன திருத்துமிடத்தில் தீச்சம்பவம்; 11 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
News
Published on 11/01/2024

ஜார்ஜ் டவுன்:

பயான் லெப்பாஸில் உள்ள லெங்காக் கம்போங் ஜாவா 2 இல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இன்று காலை 6.50 மணியளவில் ஏற்பட்ட தீயால், கேரேஜ் அருகே நிறுத்தப்பட்டிருந்த லோரியும் எரிந்ததது என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் காலை 6.51 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், பாயான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பிவைக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

“தாம் அங்கு வந்தவுடன், 9.3 சதுர மீட்டர் கொண்ட ஒட்டு மோட்டார் சைக்கிள் கேரேஜ் தீப்பிடித்து எரிவதை கண்டதாகவும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பதினொரு மோட்டார் சைக்கிள்களும், அருகில் இருந்த லோரியும் தீயில் எரிந்து நாசமானது என்றும் அவர் கூறினார்.

காலை 7.30 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட மொத்த இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments