Offline
ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி
Published on 11/03/2024 02:25
News

பெல்கிரேட்,செர்பியா நாட்டின் வடக்கு மாகாணம் ஓஓடினா மாகாணம் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் இன்று வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர்.

அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments