கோத்தா கினாபாலு:
சியாபு என்று நம்பப்படும் அரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இருபது வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பெனாம்பாங் மாவட்டத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 501.29 கிராம் அளவு கொண்ட 10 வெளிப்படையாக தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று, பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சமி நியூட்டன் கூறினார்.
மேலும் இரு சந்தேக நபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், இருவரும் மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் ஆகியவற்றுக்கு நேர்மறையாக இருந்ததாக அவர் சொன்னார்.
“அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1) (a) இன் கீழ் போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடரும் அதே வேளையில், இருவரும் தற்போது விளக்கமறியலில் உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.