Offline
Menu
விமானத்தில் இருந்து தரையிறங்கும்போது கால் இடறி விழுந்த பாகிஸ்தான் அதிபர்- எலும்பு முறிந்தது
Published on 11/05/2024 02:32
News

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடந்த புதன்கிழமை துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இன்னும் நான்கு வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என்றார்.

Comments