Offline
Menu
நடுரோட்டில் நின்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த நபர் கார் மோதி பலி
Published on 11/05/2024 03:11
News

மும்பை,நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனிடையே, மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிம்புரி சிஞ்ச்வாட் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள்  இரவு சிலர் சாலையோரம் நின்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த சோகம் பட்டேல் (வயது 35) உறவினர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார். சாலையின் நடுவே சென்று பட்டாசு வெடிக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் சோகம் பட்டேல் மீது மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட சோகம் பட்டேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் உயிரிழந்த சோகம் பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Comments