Offline
வீட்டுக்கூரை மீது இரண்டு கார்கள் குறித்து உரிமையாளர் விளக்கம்
Published on 11/05/2024 03:14
News

வீட்டுக்கூரை மீது இரண்டு கார்களை நிறுத்தி வைத்தது ஏன் என்று அதன் உரிமையாளர் நேற்று விளக்கம் அளித்திருக்கின்றார். இரண்டு தினங்களுக்கு முன்பு விருந்து நிகழ்ச்சிக்காக கூடாரம் அமைப்பதற்கு ஏதுவாக வீட்டுக்கூரை மீது இரண்டு கார்களை தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்தேன் என்று 64 வயதாம் அவாங் அலி அப்துல்லா கூறினார்.

ஆனால் இது சமூக ஊடகங்களில் இப்படி வைராலாகும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார். என் வீட்டுக்கூரை மீது பெரோடுவா கஞ்சில், புரோட்டோன் சாகா கார்களை நிறுத்தி வைத்திருந்ததை பினாங்கு போன்ற பகுதிகளில் இருந்தும் சிலர் வந்திருந்தனர் என்றும் அவர் சொன்னார். கம்போங் மாத்தாங் பொங்லாய் கிச்சில் ஆயர் ஈத்தாம், ஜெர்லுன் என்ற இடத்தை சேர்ந்த அவாங் அலி, கடந்த வியாழக்கிழமை தொடங்கி காங்கிரிட் மூலம் கட்டப்பட்ட தமது வீட்டுக்கூரை மீது தமது இரண்டு கார்களையும் நிறுத்தி வைத்திருந்தது வைரலானது.

என் உறவினரின் பேரக்குழந்தைக்காக விருந்து நடத்துவதற்கு கூடாரம் அமைக்கப்பட்டதால் எனது இரண்டு கார்களை நிறுத்துவதற்கு வேறு இடம் கிடைக்காததால் வீட்டுக்கூரை மீது நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.

எனது உறவினர்களின் உதவி மூலம் கிரேன் எனப்படும் பளுதூக்கி வாகனத்தை பயன்படுத்தி அந்த இரண்டு கார்களையும் கூரை மீது தூக்கி வைத்ததாக அவர் தெரிவித்தார். கிரேன் மூலம் 30 நிமிடங்களில் இரண்டு கார்களையும் வீட்டுக்கூரையின் மீது தூக்கி வைத்து விட்டோம். யாரோ இதை வீடியோவில் பதிவு செய்து வைரலாகி விட்டனர். இதனை படம் எடுக்க பலர் வந்து விட்டனர் என்றும் அவர் சொன்னார்.

 

Comments