அம்பாங்: திங்கள்கிழமை (நவம்பர் 4) அதிகாலையில் பாண்டான் இண்டா லெம்பா மாஜூவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அதிகாலை 4.35 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா காவல் துறைத்தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் உள்ளூர் கவுன்சில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட இடம் ஒரு பெரிய புயல் வடிகால் அருகே பொது வாகன நிறுத்துமிடம் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று அவர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சரிந்து விழுந்த குன்றின் மீது கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. வாகனத்தை அகற்ற முயற்சிக்கும் முன் அதிகாரிகள் சரிவை ஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குனர் அகமது முக்லிஸ் முக்தார் கூறுகையில், தங்கள் பணியாளர்கள் சுற்றியுள்ள பகுதியில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்த விஷயத்தை உள்ளுராட்சி மன்றத்திடம் ஒப்படைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.