கோலாலம்பூர்:
2022 முதல் அக்டோபர் 2024 க்கு இடையில் ஹலால் சான்றிதழ் மோசடி தொடர்பான மொத்தம் 140 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் வளாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவைகளிலிருந்து RM3.59 மில்லியன் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சகம் கூறியது.
“உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் ஹலால் சின்னம் மற்றும் சான்றிதழ் மோசடி விவகாரத்தை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது. இது வர்த்தக விளக்கம் (ஹலாலின் வரையறை) ஆணை 2011 மற்றும் வர்த்தக விளக்கம் (சான்றிதழ் மற்றும் ஹலால் குறியிடல்) ஆணை 2011 ஆகியவற்றின் கீழ் குற்றமாக இருக்கலாம் என்று, கடந்த அக்டோபர் 29 தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சகம் கூறியது.
ஹலால் சான்றிதழ் மோசடியைச் சமாளிக்க மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்) மற்றும் மாநில இஸ்லாமியத் துறைகளுடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சகம் மேலும் கூறியது.
இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கு உத்தியோகபூர்வ சமூக ஊடக தளங்கள் மற்றும் பத்திரிகை வெளியீடுகள் மூலம் அறிவிப்புகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் செயலாக்க ஆலைகளில் அவ்வப்போது சோதனைகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கது