Offline
முழுமையாக அந்நியத் தொழிலாளர்களை நம்பி இருக்காதீர் -டத்தோ ஷாகுல் அமீது
News
Published on 11/05/2024

நாம் தொடர்ந்து அந்நியத் தொழிலாளர்கள் குறித்து பேசி வருகிறோம். ஆனால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களை நாம் தருவித்தால் நம் பிரச்சினை தீரும் என்று யாராவது கூற முடியுமா?. அதனை யாராலும் கூற முடியாது. ஏனெனில் நமக்கு எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் வந்தாலும் நம் பிரச்சினை தீராது.

ஒரு வேளை அந்நியத் தொழிலாளர்களின் தருவிப்பை முழுமையாக நிறுத்தினால் தான் நம் மனநிலை மாறும் என்று எச்ஆர்டிஎப் தலைமை செயல் முறை இயக்குநர் டத்தோ வீரா ஷாகும் அமீது பிரெஸ்மாவின் 20ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாறும் போது தெரிவித்தார்.

பிரெஸ்மா தொடங்கப்பட்டு 32 ஆண்டுக் காலம் ஆகிறது. ஆனால் இன்றளவும் நாம் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம் என்றால் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நமக்குள் ஒற்றுமையின்மையே என்கிறார். நாம் ஒற்றுமையாக இருந்தால் பல விஷயங்களில் சாதிக்கலாம்.

குறிப்பாக பிரெஸ்மாவின் கீழ் 10,000க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு உணவகம் 500 ரிங்கிட்டிற்கான பொருட்களை வாங்குகிறோம் என்று வைத்து கொண்டால் ஓராண்டிற்கு நாம் செலவழிக்கும் தொகை 1.6 பில்லியன் ரிங்கிட்டாகும். அதனால் நாம் ஒன்றிணைந்தால் பிரச்சினைகளை குறைக்கலாம்.

நாட்டிற்கு அதிக வருவாயை ஈட்டி தரும் ஒரு துறையாக உணவகத் துறை விளங்கிறது. ஆனால் நாம் இன்னும் பல விஷயங்களில் இன்னலை எதிர்நோக்கி வருகிறோம் என்றால் அதற்கு நாமே காரணம் என்றார். மேலும் பிரெஸ்மா தலைவர் என்பது முள் கிரீடம் போன்றது. அது அவ்வளவு சுலபமான பதவி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Comments