Offline
மாதவன் வீட்டு தீபாவளியில் அஜித்!
Published on 11/06/2024 00:23
Entertainment

துபாய்: நடிகர் மாதவனின் வீட்டு தீபாவளியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் முன்பு எல்லாம் அஜித் பற்றிய செய்திகள் அதிகம் அடிபடாது. அவர் அந்த உலகத்திலிருந்து வெகுதூரம் தள்ளியே வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய செய்திகள் ஏதேனும் தவறாக வந்தால் மட்டுமே உடனடியாக அவரது மேலாளர் வழியாக மறுப்பு தெரிவிப்பார். சில நாட்கள் முன்னதாகக் கூட, அவர் பெயரில் ஒரு இணையதளம் வெளியான போது அதைப் புறக்கணிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இப்போது அஜித் முன்பு போல் இல்லை. அடிக்கடி அவரைப் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது கூட அவர் தொடங்கியுள்ள கார் ரேஸ் அணி பற்றிய செய்திகள் பெரிய அளவில் கவனத்தைக் கவர்ந்தது. அஜித் தனது தலைக்கவசத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரையைப் பயன்படுத்தி இருந்ததற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அந்த விளையாட்டுத்துறை செய்தியைக் கூட பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் அரசியல் ரீதியாக விமர்சித்திருந்தார். இந்நிலையில்தான் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா தங்களுடைய துபாய் வீட்டில் தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருந்தனர். அது குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேகமாகப் பரவியது. அதில் என்ன பெரிய விஷேசம்? லட்சக் கணக்காக மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதானே? என்று நினைக்கலாம் அங்குதான் டிவிஸ்ட் இருந்தது. மாதவன் வீட்டு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில் அஜித் பங்கேற்றுள்ளார். எனவேதான் அந்தச் செய்தி வைரலானது.

Comments