Offline
இழுத்து மூடுங்க சார்.. பிக் பாஸ் வேண்டவே வேண்டாம்..
Entertainment
Published on 11/06/2024

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விடவும் மிகவும் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் ஏமாற்றம்தான் ஏற்பட்டு வருகின்றது. இந்த சீசனில் இருக்கும் ஒரே உருப்படியான விஷயம் என்றால் அது, விஜய் சேதுபதிதான் என ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளன நிலையில், புதிதாக 6 பேர் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியில் சென்றுள்ளனர். தற்போது வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை, ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என மூன்றுபேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே வீட்டில், முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா மற்றும் ஆனந்தி என 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில், புதிதாக ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் என 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்றுள்ளார்கள்.

கருத்துரிமை பாதுகாப்பு: இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் எனவும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, தூத்துக்குடி மாவட்டம் கோட்டாச்சியர் அலுவலம் முன்பு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

Comments