Offline
'பிளடி பெக்கர்' படம் எப்படி இருக்கிறது?
Published on 11/06/2024 00:38
Entertainment

படத்தின் பெயர் குறிப்பிடுவதுபோல ஒரு பிச்சைக்காரர்தான் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம். சென்னை, இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'.

தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் எப்படி உள்ளது என்பதை காண்போம்.

படத்தில் கவின் பிச்சைக்காரராக வாழ்ந்து வருகிறார். ஒரு அரண்மனையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் கவின் அரண்மனைக்குள்ளேயே மாட்டிக்கொள்கிறார். அங்குள்ளவர்கள் சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள்.

அதற்கு நடுவில் கவின் என்ன செய்கிறார்?அவரை என்ன செய்ய வைக்கிறார்கள்? அரண்மனையில் இருந்து கவின் தப்பிப்பாரா? என்பதுதான் மீதி கதை.

Comments