Offline

LATEST NEWS

நடிகர் நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம்
Published on 11/09/2024 03:31
Entertainment

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு இன்று ஜப்பானில் திருமணம் நடைபெற்றது, தன்னுடைய மகனுக்கு திருமணம் நடந்த அந்த தருணம் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண்கலங்கி நின்றார்.

தனது மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் நான்கு வயதிலேயே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக பல சிகிச்சைகள் எடுத்துப் பார்த்தார். ஆனாலும் அதில் அவர் முழுமையாக குணமடையவில்லை. எனவே தன்னுடைய மகனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு திருநெல்வேலியில் ஒரு மையோபதி மருத்துவமனையையும் கட்டி வைத்திருக்கிறார் நெப்போலியன். திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனது மகனுக்கு இன்று திருமணமும் செய்துவைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், நெப்போலியனின் நண்பர்கள் என பலரும் கலந்து திருமண தம்பதியரை வாழ்த்தினர். நாமும் அவர்கள் பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துவோம்.

 

Comments