Offline

LATEST NEWS

எளிமையாக நடைபெற்ற ‘பிக்பாஸ்’ பிரதீப் ஆண்டனி திருமணம்!
Published on 11/09/2024 03:32
Entertainment

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவருக்கு நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவு இருந்த நிலையில், சக போட்டியாளர்கள் அவர் மீது சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி பிக்பாஸால் ‘ரெட் கார்ட்’ கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

இந்த நிலையில், தன்னுடைய நீண்ட நாள் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதீப் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மிகவும் எளிமையான முறையில் சர்ச்சில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை பிரதீப் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இந்த பெண்ணை காதலித்து வந்தார் என்றும், அவர் பெயர் பூஜா என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

பிரதீப்- பூஜா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.

Comments