Offline
புக்கிட் பிந்தாங்கில் விபச்சாரம்; 4 வெளிநாட்டினர் கைது
News
Published on 11/11/2024

கோலாலம்பூர்:

தலைநகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தப் பெண்கள் ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் இம்பி பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் 100 ரிங்கிட்டுக்கும் குறைவான பெறுமதியில் சேவை வழங்குவதாகவும் ,அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதாகவும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ருஸ்டி இசா கூறினார்.

குறித்த தகவலின் அடிப்படையில் டாங் வாங்கி நகர குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (D7) குழு ஒன்று நேற்று இரவு 11.30 மணியளவில் குறித்த இரு இடங்களிலும் “ஓப்ஸ் நோடா” நடவடிக்கையு நடத்தியதாக அவர் சொன்னார்.

சோதனையின் போது, ​​எட்டு ஆணுறைகள், 3,720 ரிங்கிட் ரொக்கப்பணம், நான்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஈர திசுக்கள் உட்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்

Comments