நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் மலேசியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அபார வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ டாமன்சாரா டாமாய் இந்திய சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்வின் போது தமதுரையில் தெரிவித்தார்.
டாமன்சாரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என் தொகுதி மக்களுக்கு என்னால் இயன்ற சேவைகளை செய்து வருகிறேன். மடானி அரசாங்கத்தின் கீழ் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன, மதம் பாராமல் அனைத்து மலேசியர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறோம் என்றார். நாம் மலேசியர்களாக ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்காவும் ஒற்றுமைக்காகவும் பாடுபடுவோம் என்றார்
முன்னதாக உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அரசாங்கம் வழங்கும் உதவிகள் அனைவருக்கும் குறிப்பாக இந்திய சமூகத்தை சென்றடைய வேண்டும் என்று தலைவர்கள் பாடுபடுகின்றனர் என்றார். நமது ஒற்றுமை நமது பல என்பதனை நாம் அனைவரும் எப்பொழுது உணருகிறோமோ அப்பொழழுதே நாம் முன்னேறிய சமுதாயமாக இருப்போம் என்று தெரிவித்தார். புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் தமதுரையில் டாமன்சாரா டாமாய் இந்திய சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த தீபாவளி விருந்து நிகழ்விற்கு 3,000 ரிங்கிட்டை நன்கொடை வழங்கினார்.
இயக்கத்தின் தலைவர் ரமேஷ் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும், டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங், அவரின் அரசியல் செயலாளர் சுரேஷ் சிங் ஆகியோர் எப்பொழுதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். டாமன்சாரா டாமாய் இந்திய சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்திற்காக கோபிந்த் சிங் 20,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அதே வேளை புவா பெய் லிங் 3,000 ரிங்கிட்டை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த தீபாவளி விருந்து நடைபெற பேருதவியாக இருந்த எங்களின் இயக்க உறுப்பினர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர். இந்த விருந்து நிகழ்வின் போது 20 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும், ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள், தங்க சங்கிலி உள்ளிட்ட அதிர்ஷட குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டன.