Offline
காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்
Published on 11/11/2024 16:42
News

குவாந்தான்: சனிக்கிழமை முதல் காணாமல் போன பதின்ம வயதுப் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 15 வயதான உம்முல் அயுனி அதிகா காமிஸ் கடைசியாக மாரானில் உள்ள கம்போங் பாயா செடுங்கில் காணப்பட்டதாக மாரான் காவல்துறைத் தலைவர் வோங் கிம் வை கூறினார்.

உம்முல் அயுனி நடுத்தரமான உடல்வாகு உடையவர் என்றும், இடது கன்னத்தில் மச்சம் இருப்பதாகவும், சுமார் 150 செமீ உயரம் கொண்டவர் என்றும் அவர் கூறினார். அவர் கடைசியாக ஒரு குட்டைக் கை கருப்பு மற்றும் வெள்ளை  ரவிக்கை, கருப்பு கால்சட்டை மற்றும் ஒரு ஜோடி கருப்பு செருப்புகளை அணிந்திருந்தார். தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்லலாம் அல்லது மாரான் காவல் நிலையத்தை 09-4771222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Comments