Offline

LATEST NEWS

Actor Dhanush: காதலர் தினத்தில் ரிலீசாகும் தனுஷ் படம்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!
Published on 11/15/2024 01:03
Entertainment

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசான ராயன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை சிறப்பாக கொடுத்திருந்தார் தனுஷ். படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தன.

இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் படங்களை உருவாக்கி வருகிறார். மற்ற இயக்குநர்களையும் விட்டுவிடாமல் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இதையடுத்து இட்லிகடை படத்தையும் இயக்கி வருகிறார்.

Comments